பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


என்போரும் "கலை வேறு; அரசியல் வேறு;” எனக் கதைப்போரும், காதை மூடிக் கொள்வோரும், துவேஷப் பிரச்சாரம் செய்வோரும், தோள் தட்டுவோரும் இருக்கிறார்கள் நாட்டில். அவர்களுக்குத் தெண்டனிட்டுப் புன்சிரிப்பைப் பெற அல்ல, நாம் இந்தப் பாதை சென்றது. ஆகவே, அவர்களது எரிச்சலே நமக்கு எரு, ஆத்திரமே ஆனந்தம்.

இன்பக் கனவிலே அந்த நற்பணியைக் காண முடிகிறது. நடித்தோர் அனைவரும் நம்முடையவர்கள். எனவே, நறுமணமும், அருங்கொள்கையும் அரசோச்சுகின்றன. இந்த அரிய முயற்சியிலே வெற்றி கண்டுவரும் எம்.ஜி.ஆரின் தீவிர எண்ணங்கள், இன்னும் பல நாடகங்களாக எழிலுருக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன். இன்பக் கனவு தரும் எல்லாருக்கும் - இசையமைப்பாளர் உட்பட - கண்டுமகிழ்ந்த மக்களைப் போல், நானும் வாழ்த்துகிறேன்.

வளர்க கலை! வாழ்க நற்பணி !!
வகைப்பாடு: கலை - நாடகம்.
(6-6-64 அன்று வேலூரில் நடைபெற்ற இன்பக் கனவு

நாடகத்திற்குத் தலைமையேற்று ஆற்றிய உரை. நன்றி : தென்னகம்)