இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
இந்தியாவிலேயே சிறந்த அதிகாரிகள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன், தி.மு.க. நல்ல முறையில் ஆட்சியை நடத்திச் செல்லப் பாடுபடும். மத்திய அரசாங்கத்தின் நல்ல ஒத்துழைப்புடன், பணியாற்றத் தி.மு.க. விழையும்.
நாம் ஏற்றிருக்கும் பொறுப்பு மிகப் பெரியது. நாம் அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்
(26-2-67-இல் சென்னையில் நடந்த சட்டமன்றத் தி.மு.க. உறுப்பினர் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை)
பண்பாடு
கருத்து வேறுபாடு இருந்தாலும், பாராட்ட
வேண்டியதைப் பாராட்டுவது என்பது தமிழ்ப்
பண்பாடு
வேண்டியதைப் பாராட்டுவது என்பது தமிழ்ப்
பண்பாடு
— பேரறிஞர் அண்ணா