பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


பழைய தலைமுறையினரை மாணவர்கள் அனுசரித்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானதாகும். 'ஜெட்' கால மாணவர்களே மிகவும் மந்தமாகச் செல்லும் காலத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்று குறைகூறக் கூடாது.

பிரச்சினைகளில் மாணவர்கள் ஆர்வங் காட்டுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், பிரச்சினைகளில் ஆர்வங்காட்டுவது வேறு; பங்கு பெறுவது வேறு.

இப்பொழுது பல்வேறு துறைகளில் மாணவர் கள் வளர்ச்சியடைந்துள்ளனர். இப்பொழுதுள்ள பிரச்சனைகள் வேறு. இன்று எந்தப் பிரச்சினையும் ஒன்றோடு மற்றொன்று இணைந்தாகவே இலங்குகிறது.

என்னுடைய வயதான நண்பர் ஒருவர், ”உணவுப் பிரச்சினையைத் தீர்க்கச் சுலபமான வழி இருக்கிறது ” என்றார், நல்லெண்ணத்தோடு அந்த வழியையும் என்னிடஞ் சொன்னார்

"பர்மாவிலிருந்து 4 அல்லது 5 கப்பல் நிறைய அரிசி கொண்டுவந்தால் போதும். அரிசிப் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்பதாகும் அது. சுலபமானது தான் அவருடைய யோசனை. உண்மையில் அது பலனளிக்ககூடியதுதான். ஆனால், பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நாம் நினைத்தால் முடியாது. அதற்கு அதிகாரம் டில்லியில் இருக்கிறது.