பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


மாணவர்கள் தோழமையை மட்டுமல்ல, துணையையும் தமிழக ஆட்சி விரும்புகிறது. உங்களுடைய ஆலோசனைகளையும் அவற்றை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்னுங் கருத்துக்களையும் தாருங்கள். எங்களால் முடியாவிட்டால்"முடியவில்லை, முடியாததற்கு இன்னன்ன காரணங்கள்" என்று சொல்லவும் கூச்சப்படமாட்டோம்.

மாணவர்களே மட்டும் ஆலோசனை கேட்க வில்லை. எல்லாத் தரப்பிலும் கேட்கிறோம். முடிந்தால் சில பிரச்சினைகளில் ஐரோப்பியநாடுகளில் கையாளப்படும் பொது வாக்கெடுப்பு முறையை அமுல் நடத்த முயலுவோம்.

முன்பு தமிழக மக்கள் மட்டுமே இந்தியை எதிர்த்தார்கள். இப்பொழுது தமிழக அரசும் இந்தியை எதிர்க்கிறது. மக்களின் உணர்ச்சிகள் மெய்ப்பிக்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில் மைய அரசு நம் பக்கம் வரும் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. தலைமை அமைச்சராகி இருக்கும் திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மொழிப் பிரச்சினையில் அவர் அவ்வளவு பிடிவாதமாக இருக்கமாட்டார் என்று நான் எண்ணுகிறேன்

கடந்த காலத்தில் மாணவர்கள் அவர்களது அரசியல் அல்லது மொழி உணர்ச்சிக்காகப் பழி வாங்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.

இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பிறகுதான், கோட்டைக்குச்

F-3