பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


ஆசிரியர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பு, தமிழ்ச் சமுதாயம் சீரிய பண்பாட்டுடன் வளர வழி வகுப்பதாகும். இலட்சியச் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

தொடக்கம் தூய்மையாக இருந்தால்தான் தொடுப்பும் முடிப்பும் சரியாக அமையும். கல்விகளுக் கெல்லாம் அடிப்படையானது தொடக்கக் கல்வி. எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையாக அகரம் இருப்பதுபோல், கல்வித் துறைக்கு அடிப்படையானது தொடக்கக் கல்வி! சமுதாயத்தை மகிழ்ச்சி உள்ளதாக ஆக்கும் பொறுப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குண்டு.

நம்முடைய மாநிலத்தின் ஆளுநர் அவர்கள் கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியர்களைப் பாராட்டினார்கள். ஆளுநரின் வாழ்த்துக்களுடன் விருதுகளைப்பெற்றிருக்கும் ஆசிரியர்கள், அழிவிலாச் செல்வத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

மூன்றடுக்கு மாடியில் வாழ்பவன் மேல்மாடியில் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, வழியில் செல்பவன், 'இவன் எப்படிப் பணம் சேர்த்தான்?' என்று எனக்குத் தெரியும் என்று சொல்லுவான். ஆனல், ஆசிரியர்கள் பெற்றிருக்கும் செல்வங்களை யாராவது குறைகூற முடியுமா?

ஆளுநரின் திருக்கரத்தால் ஆசிரியர்கள் பெற்றிருக்கும் விருதுகளைப் பார்க்குந்தோறும், எண்ணுந் தோறும் மகிழ்ச்சிதரத்தக்க கடமையின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கும். ஏனெனில், ஆசிரியர்கள் பெற்றிருக்கும் செல்வம் இழிவும், பழியுமில்