பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


'அனைத்திந்தியா’ என்பதை நாம் அடிக்கடி எல்லாவற்றிலும் பயன்படுத்தி வருவதில்கூடப் பல 'இந்தியாக்கள்' இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் 'அனைத்திந்தியா' என்று சொல்லி வருகிறோம். எந்த நிலையிலும் 'ஆல் பிரிட்டன், ஆல் ஜெர்மன்' என்று சொல்லுவதில்லை

அனைத்திந்திய அடிப்படையில் பேசப்படும் பிரச்சினைகள் மொழி விஷயத்தில் மட்டுமல்ல. தொடர்புகள் விஷயத்திலும் பேசப்படுகின்றன. அனைத்திந்தியாவும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவைகள் இருக்கவேண்டும்.

அனைத்திந்திய அடிப்படையில் பேசப்படுபவைகள் அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மைகளை அழிக்கக்கூடியவைகளாக இருந்தால், அனைத்திந்தியா வலுவுள்ளதாக இருக்க முடியாது. அனைத்திந்திய அடிப்படையில் பேசப்படுபவைகள் எல்லாம் இணைந்து இழைந்து இருக்கும் வரையில்தான், எல்லாம் நன்றாக இருக்க முடியும். கொஞ்சம் அந்த அனைத்திந்திய அடிப்படை உராய்ந்தால், ஆபத்துத் தான் ஏற்படும்.

எதற்கு அனைத்திந்திய அடிப்படை தேவையோ, அதற்குமட்டும் அனைத்திந்திய அடிப்படை இருந்தால் போதும். சொற்களில்கூட அனைத்திந்திய அடிப்படையைப் புகுத்துவது தேவையில்லாததாகும் இந்த நிலையில் நாம் எல்லாவற்றிலும் அனைத்திந்திய அடிப்படையைக்கொண்டு வருவது நல்லதல்ல:

வகைப்பாடு: ஆட்சி-மொழி
(14-4-67 அன்று சேன்னையில் நடைபெற்ற சட்டச் சொற்பொருட் களஞ்சிய முதற்பகுதி வெளியீட்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)