பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஆசியப் பொதுச் சந்தை



இந்தியாவில் ரூபாயின் மதிப்பு குறைக்கப் பட்டதன் எதிரொலியாக வெளிநாடுகளுக்குச்செய்யும் ஏற்றுமதியும் குறைந்து விட்டது. ரூபாய் மதிப்பு குறைப்பின் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்,அதன் மூலம் ஏற்றுமதியை அதிகப்படுத்த முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். மாறாக, இதனால் ஏற்றுமதி குறைந்தது. இதை அரசியலுக்காகக் கூறுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை ; ஏற்பட்ட நிலைமையினைத்தான் எடுத்துக் கூறுகிறேன்.

நமது நண்பர்கள் மூவரும் நிறைய நல்ல முறையில் நமது நாட்டில் தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்ததற்காகப் பரிசுகள் வழங்கினோம். இதுபற்றி மெத்த மகிழ்ச்சி அடைகின்றேன், பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இருந்தாலும், நமது ஏற்றுமதியாளர்கள் இன்னும் ஏற்றுமதியை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும். அதற்கான ஆக்கப்பணிகளில் ஊக்கம் காட்டவேண்டும் ஆசிய நாடுகளில் வணிகர்கள் யாவரும் ஒன்றுகூடி. 'ஆசியப் பொதுச்சந்தை' அமைத்து, ஆசிய நாடு களின் பொருளாதாரத்தை, நாட்டின் வளத்தைப் பெருக்கிடவேண்டும்; முன்னேற்றமடையச்செய்திட வேண்டும் !

F–4