பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


ஏற்றுமதியைப் பெருக்கிட அயல் நாடுகளில் நாம், நமது உற்பத்திப் பொருள்களைப் பற்றிச் சிறந்த முறையில், பலவழிகளில் நிறைய விளம்பரம் செய்துவரவேண்டும். அப்போதுதான் நம் நாட்டு ஏற்றுமதிப்பொருட்களுக்கு அயல் நாடுகளில் நல்ல மதிப்பிருக்கும், நல்ல விலை போகும், நிறையத் தேவையும் ஏற்படும். வெளிநாட்டவர், நமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு நல்ல விளம்பரம் இல்லை என்று குறைபட்டுக்கொள்கின்றனர்.

நாம் நமது பொருட்களின் ஏற்றுமதிகளை விரிவு படுத்த நினைக்கும் இதே நேரத்தில் நாம், நமது இறக்குமதிகளையும் குறைத்திட எல்லா வழிகளையும் கையாளவேண்டும். அதற்கான முயற்சிகளை, இத்துறையில் ஈடுபட்டவர்கள் கையாளவேண்டும். நாம் நமது ஏற்றுமதியைப் பெருக்கிட மூலகாரணமாயுள்ள தொழிலாளர்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்றார்போல் உயர்த்தித்தந்து, அவர்களையும் ஆதரிக்கவேண்டும்.

பட்டு மற்றும் கைத்தறித் துணிகளை எந்த அளவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப் பாடுபட வேண்டும். இறக்குமதிகளை அடியோடுகுறைத்திட்ட ஒரு நாடுதான் உண்மையில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கமுடியும். படிப்படியாக நாம் இறக்குமதிகளைக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிருேம்.

உரங்கள், மருந்துப்பொருள்கள், இயந்திரங்கள் முதலியன தவிர, மற்ற இறக்குமதிகளும் குறைக்கப் பட்டு வருகின்றன. ஏற்றுமதியை அதிகப்படுத்த