பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


சொல்லிக் கொண்டோரையும், தாழ்ந்தவர் எனக் கூறப்பட்டோரையும் தமக்குப்பின்னே வழிநடத்திய மாமனிதர் மகாவீரர். அவர் பின்செல்லவும், அவர் விட்டுச் சென்ற நல்ல செயல்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.

நான் நல்ல வாழ்க்கை என்று கூறுவது, "நாம் மட்டுமல்லாது, பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழவேண்டும்” என்பதைத்தான் நல்ல வாழ்வு எனக்கருதி, மக்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

வகைப்பாடு: சமயம்: சைன மதம்-மகாவீரர்.
22-4-67 அன்று சென்னை ஜைன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மக: வீரர் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய தலைமை உரை

தலையா யா பாணி பல்கலைக் கழகத்தின் தலையாய பணி அறிவாற்றலைப் பெறவிரும்புவோர்க்கு அதனை அதன் உண்மையான அளவிலும் நோக்கத் திலும் அளிப்பதும், உலகின் கருத்துக்கள் குறிக் கோள்கள் ஆகியவற்றின் தனியாண்மையினைக் காப்பதும் ஆகும். - பேரறிஞர் அண்ணா.