உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

உடையைப் பார்க்கின்றார்கள், கடன் கேட்பவரின் இதழ்களில் உள்ள புன்னகையின் மதிப்பைப் பார்க்கின்றார்கள்!

தமிழகத்தைப் பொறுத்த மட்டில், நாம் எதிர்பார்த்ததை ரிசர்வ் வங்கி கொடுப்பதில்லை, நமக்குச் சாதகமாக அது இல்லை!

வகைப்பாடு: பொருளாதாரம்—தொழில் திட்டங்கள்.
(24-4-67 அன்று சென்னைத் தேசிய வணிகக் கழகத்தில் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)



9. மாநில மைய அரசு உறவுகள்


மாநில, மத்திய அரசுகளின் தொடர்பு பற்றி இங்கே விவாதிக்கப்பட இருக்கிறது. “தொடர்பு” என்பதே ‘நீக்கப்பட முடியாதது, இருந்து தீர வேண்டியது’ என்றுதான் பொருள் தரும். இல்லையென்றால், இருவருடைய தொடர்பு ஒருவருக்கு மட்டுஞ் சொந்தமாக மாறி விடும், ஆகையால், மாநில—மத்திய அரசுகளின் தொடர்பு பற்றிய சிந்தனை, விரிவாகப் பரந்து காணத் தெளிவான கண்ணோட்டத்தைப் பெற வேண்டும்.