பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35 நான் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால், திரு. சந்தானம் அவர்கள் கூறிய கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியவில்லை. நான் கூறுகிற கருத்து தமிழக அரசினர் கருத்து என்று கருதப்படுகிறது என்பதால்தான் விமர்சிக்க முடியவில்லை, இதுபோன்ற கழகங்களும் சங்கங்களும் இக்கருத்து உரையை விவரமாக விவாதிக்க வேண்டும், தம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். திரு. சந்தானம் அவர்கள் சொன்ன கருத்துக்களில் எனக்குக் கவர்ச்சிக் கருத்தாகத் தோன்றியது. ‘மாநில அரசுகளின் பிரதிநிதிக்குழு’ பற்றியதாகும். மாநிலச் சட்டமன்றங்களின் இரு அவைகளிலுமுள்ள உறுப்பினர்களைக் கொண்டு மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை கூறக்கூடிய அரசியல் சட்டப் பரிசீலனைக் குழுவைப் பற்றிச் சந்தானம் எடுத்துரைத்தார். இது கவர்ச்சியான யோசனை ஆகும். ஒரு மாநில அரசாங்கத்திற்கும். மற்ற மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் ஏற்படுஞ் சிக்கல்களைத் தீர்க்க இக்குழு அமைந்தால் பெரிதும் பயன்படும். மாநில அரசாங்கங்களுக்கு மதிப்பில்லாமல் போனதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டுமென்னுங் கருத்து ஒரு கசப்பான உண்மையாகும். ஆனால், அதை நான் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன்.