பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37 மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும், ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமே தவிர, ஒன்றாக்கப்பட்டு விடக்கூடாது. கலந்துரையாடியே பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண வேண்டும். அடிமை மனப்பான்மை வந்து விடக்கூடாது, சொல்பவர் ஒருவர்; கேட்பவர் பலர் என்னும் நிலை அமையக் கூடாது. இந்த முறையில்தான் இனிமேல் இந்திய அரசியல் முறை அமைய வேண்டும். "மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வேண்டும்" என்று நான் கூறினால், பிரிவினைக் கொள்கையை முன்பு வலியுறுத்தியவன் என்பதால், பழைய கோரிக்கைகளுக்கு இப்படி வடிவம் தந்து பேசுகிறேன் என்பார்கள். ஆனால், திரு. கே.எஸ். சந்தானம் போன்றவர்கள் பேசினால், அப்படிப்பட்ட கருத்துத் தோன்றுவதற்கு இடமில்லை. மத்திய, மாநில அரசாங்கங்களின் தொடர்பு பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்தச் சிந்தனை இல்லாவிட்டால், ஆபத்து வந்து சேரும் என்னும் அச்சமும் தோன்றியிருக்கிறது, வகைப்பாடு: ஜனநாயகம்-கருத்தரங்கு. 24-4-67 அன்று திருவல்லிக்கேணிப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரை.