பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அமெரிக்கா, தென் அமெரிக்கா, மையக்கிழக்கு நாடுகள் ஆகியவற்றிற்கு இந்தியத் திரைப்படங்களே அனுப்புவதன் மூலம், வெளிநாட்டுச்செலவாணியை ஈட்ட மைய அரசு ஆய்வு செய்யவேண்டும். திரைப்படத் தொழிலுக்கு இன்றியமையாப் பொருட்களே இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப் பாடுகளே கொஞ்சம் மைய அரசு தளர்த்தலாம். பெரிய தொழிற்சாலைகளின் வருமா னங்கள் எல்லாம் மைய அரசுக்குப் போய்விடுகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு பற்ருக்குறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நெய்வேலி நிலக்கரித் தொழிற்சாலை, திருச்சிக் கொதிகலத் தொழிற்சாலை,பெரம்பூர் இரயில்பெட்டித் தொழிற்சாலை போன்ற பெரிய தொழில்கள் எல்லாம் மைய அரசிடம் உள்ளன. அந்த வருமானம் மைய அரசுக்கே போகிறது. தமிழக அரசிடம் இருப்பது பேருந்துப் போக்கு வரத்தும், கதர்த் தொழிலும்தான். இந்த இலட்சணத்தில் நிதிநிலைத் திட்டத்தில் துண்டுவிழாமல் இருக்க முடியுமா ? இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 8 கோடி துண்டு விழுந்திருக்கிறது. நிலை இதுவே. இருந்தாலும் இயன்றவரை தமிழக அரசு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வகைப்பாடு : பொருளாதாரம் - திரைப்படத் தொழில் முன்னேற்றம். 9-5-67 அன்று சென்னைத் திரைப்பட உற்பத்தியாளர் சங்க விழாவில் ஆற்றிய தலைமை உரை.