பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46-

தமிழால் முடியும் என்னும்நிலை ஏற்படுவதற்குக் காரணம் தம்பி கருணநிதி சொல்லியதைக் கேட்டீர்கள். நாம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டோம் ; முன்னேறி வருகிறோம். த மி ழ ல் முடியும் என்று காட்டுவோம், அதற்குரிய நம்பிக்கை நிரம்ப ஏற்பட்டிருக்கிறது. இதிலே வெற்றி பெறுவதற்கு இப்போது இல்லாத அளவிற்கு நமக்கு ஆங்கில மொழியில் தொடர்பு வேண்டும். இரும்பு இல்லாமல் கருவிகள் இல்லை. தமிழ் இருப்பதால் மட்டும் காரியம் முடிந்து விடாது.
இன்று மா லே என்னிடத்தில் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த சிலர் வந்து நாற்பத்தேழு ஆங்கிலப் புத்தகங்களைக் கொடுத்தார்கள். அவற் றில் பொருளாதாரத்தில் மட்டும் பத்துப் புத்தங்கள் இருந்தன. பொதுப் .பொருளாதாரம், தனிப் பொருளாதாரம், விலைவாசி என்று பல கூறுகளாகப் பிரித்து ஒவ்வொன்றைப் பற்றியும் ஓராயிரம் ஏடுகள் எழுதி இருக்கிறார்கள்.
நீங்கள் நூலகத்திற்குச் சென்று பார்த்தால் சரித்திரம் பூகோளம் என்று தனித்தனியாக ஏராள மான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இவையெல்லாம் தமிழ் மொழியில் வர வேண்டும். பல்வேறு மொழியின் கருத்துக்களைத் திரட்டித் தரவேண்டும்.
அவர்கள் அறிவை விரிவாக்கி, வகைப்படுத்தி வரிசைப்படுத்தி இருக்கிருர்கள். நாம் பொருளா தாரத் துறையில் அடையும் முன்னேற்றத்தைப்