பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



49

நாடுகள் தமக்கென்று புதிதாய் மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. நாம் அவர்களிடருந்து வேறுபட்டவர்கள். எல்லாக் கல்லூரிகளிலும் தமிழே பயிற்று மொழியாக வேண்டும்.

வகைப்பாடு : கல்வி - பயிற்றுமொழி.

27-7-67 அன்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் வாயில் வகுப்புகளைத் தொடங்கி வைத்து ஆற்றிய தலைமை உரை.

———


13. மக்கள் தலைவர் காமராசர்

—————

இந்தப் படத்தைத் திறந்து வைப்பவர் ஒரு காங்கிரசுக்காரராக இருந்தால், அவர் பாராட்டுவது கடமைக்காக இருக்கலாம் ; அல்லது பெற்றதற்காக இருக்கலாம் ; ஒரு வேளை இனிமேல் ஏதாவது பெறலாம் என்ற ஆசையாலும் இருக்கலாம். காமராசர், கட்சி அளவில் கருத்து வேறுபாடு உடையவர் என்றாலும், நான் மதிக்கத்தக்க அளவுக்குப் பெருமை படைத்தவர் என்பதை இவ் விழா எடுத்துக்காட்டும் என்னும் நம்பிக்கையில், காமராசரின் படத்தைத் திறந்து வைக்கிறேன்.

மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்களை அளித்தேன் ; தமிழ்ச் சமுதாயத்திற்கு, என்னல் இங்கே

F–7