பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

அப்பாதுரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அறிந்தவன், அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன், அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான். ஒருவரை நாம் மதிக்கும் நேரத்தில் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படும் இனிமையைவிட, வேறு ஓர் இனிமை இருக்கமுடியாது.

அப்பாதுரையாரை நாம் எந்தக்கோணத்திலிருந்து பாராட்டுகிறோமோ, அதையல்லாமல் அவருடைய தனித் திறமையை அறிந்தவர்களும், அவருடைய தொண்டின் மேன்மையை அறிந்து பல்வேறு கோணங்களில் இருப்பவர்களும் பாராட்டிப் பேசுவதைக் கேட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

நம்முடைய அப்பாதுரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் துவக்கிய காலத்திலிருந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்ட கட்டம் வரை அவருடைய தனித்திறமையை அறிந்திருக்கிறோம். அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழனத்திற்கும் மற்ற இனத்துக்குமிடையே, பகை மூட்ட அல்ல, தோழமையை ஏற்படுத்த அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.

நமது அப்பாதுரையார் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்தாலும் சிந்தனை, படிப்பு, எழுத்து என்று