பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

இப்படியே தம் வாழ்நாளை மிகச் சிறப்பாகக் கழித்திருக்கிறார். இந்த நாட்டில் அறிவாளன் என்று அறிந்தாலே ஆபத்து. அவன் என்ன பெரிய அறிவாளியா? என்று கேட்பதன் மூலம் தன்னிடம் அறிவு இருக்கிறது எனக் காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள். இத்தகைய அறிவுப் பணி செய்வதே மிகச் சிக்கல். ஆனால், சிக்கலிலேதான் சுவை இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ, அந்த அளவுக்கு இங்கே ஈடுபடிவது என்பது மிகக் கடினம்.

பன்மொழிப் புலவர் அவர்கள் தம் வாழ்க்கையைக் கரடுமுரடான பாதையில் நடத்தி மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்குமளவுக்குப் பணி புரிந்திருக்கிறார். இவரது வாழ்க்கை பூந்தோட்டமாக அமைந்துவிடவில்லை. எனினும், வாலிப உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல் களையும் தாங்கிக் கொண்டு தம் பணிகளைச் செய்திருக்கிறார். நண்பர் கி. ஆ. பெ. விசுவநாதம் சொன்னதுபோல், இவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகி இருக்க முடியும்.

ஒவ்வொன்றையும் பற்றி, “ இப்படிச் செய்வது சரியா ? " என்னும் எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கும். சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார். பிறகு அது பிடிக்காமல் இதழாசிரியராவார். அதன் பிறகு, தமிழ்ப்

F–8