பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர்ப் போராட்டத்தினால் பயனில்லை எனக் கருதி ஏடுகளை எழுதியளிக்க எண்ணுவார். அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.

பாடுபவர், பல்வேறு இசை நுணுக்கங்களையும் எப்படி ஒரு குறிப்பிட்ட சுதிக்குள்ளாகவே நிறுத்துகிறாரோ, அதேபோல் இவரும் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டாலும் தம் வாழ்நாளை ஒரு சுதிக்குள்ளாகவே, தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும் என்னுங் கட்டத்திற்குள் ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார். இது மிகப் பெரிய விரும்பத்தக்க இலட்சியமாகும்.

மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ்மொழிப் பிரச்சினையில் இன்று ஒன்றுபடுகிறார்கள். நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம், பேச்சு, நட வடிக்கைகள், இருக்குமிடம் ஆகியவற்றால் மாறு பட்டவர்கள் என்றாலும் எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி. இதற்குள் எல்லாவற்றையும் நாம் காட்டலாம். இது ஏற்படத் தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகள் பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு அடங்கி நடப்பவர் எத்தனைபேர் என்பதை நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் பயனின் அளவைக் காணலாம். இந்தச் சுதியை நமக்குத் தந்தவர்களில் அப்பாதுரையாரும் ஒருவர். அ ப் ப டி ப் ப ட் ட மு ைற யி ல் அமைவதுதான் அடிப்படையான தொண்டு.