பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 யாராவது தாறுமாருக நடந்தால், வழக்கத்திற்கு மாருக நடந்தால்கூட, என்ன குடித்திருக்கிருயா? என்று கேட்பதுதான் நம் வழக்கம். நம் திரைப்படங்களில்கூட, ஏன் நாடகங்களில் கூட நீங்கள் கவனித்திருக்கலாம். கதாநாயகர்கள் குடிக்கமாட்டார்கள். கயவனாக வருபவன்தான் குடிப்பதாகக் காட்டப்படுவான். இவ்வகையில் நம் கதை ஆசிரியர்கள்கூடப் பாராட்டப்பட வேண்டிய வர்கள். கதைகளில் குடிப்பது தகாத செயலாகவே காட்டப்படுகிறது. நல்லவர்கள் குடிப்பதில்லை. குடிப்பவர்கள் நல்லவர்கள் அல்லர். நல்லவர்களும் குடிக்கும்போது கெடுகிறார்கள். இந்த உண்மையை அனைவரும் உணர்கிறார்கள். ஆனால், நடைமுறையில்தான் சிலர் தவறுகிறார்கள், உண்மை உணரப்படுகிறது. ஆனால், நடைமுறைக்கு அது வரக் கடினமாக இருக்கிறது. மனிதருள் பெரியவராக இருந்த காந்தியடிகளே " உண்மையிடம் வெற்றி கண்டதாக’க் கூறவில்லை. உண்மையிடம் வாய்மை ஆய்வு நடத்தியதாகத் தான் சொல்லி இருக்கிறார். அந்த மேதைக்கே அப்படி என்றால் சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. எனவேதான், மதுப் பழக்கம் தீது’ என்ற உண்மை தெரிந்திருந்தால்கூட அதனை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் தேவைப்படுகிறது.