பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இன்று காலையில்கூட எனக்கு வந்த கடிதங் களில் ஒன்று, இச்சிக்கல் பற்றி என் நண்பர் ஒருவ ரால் எழுதப்பட்டதாகும். அவர் குடித்தவர் அல்லர். குடிப்பவரும் அல்லர். இனியும் குடிக்க மாட்டார். ஆனாலும் அவர், " ஏன் ஒவ்வொரு முறையும் நிதி வசதி வேண்டித் தில்லியின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ? கள்ளுக்கடைகளைத் திறந்து விடுங்கள், கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும்’ என்று எழுதி இருந்தார். மதுவிலக்குக்காக வாதாடுங் குணம்படைத்த அவர், பொருளாதார நிலைமை காரணமாக எனக்கு இந்தக் கருத்தேற்றத்தை எழுதி யிருந்தார். ஆல்ை, அவரும், அவரைப் போன்ற வர்களும் இப்போது வளர்ந்துவரும் இளைய பரம் பரையினரை மறந்துவிடுகிறார்கள். "மது என்றால் என்ன ? மதுக்கடை எப்படி இருக்கும்?” என்று தெரியாமல் இருந்து வருபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இவை இரண்டும் மீண்டுந் தெரியத்தான் வேண்டுமா? மீண்டும் நம் இல்லங்களில் அழுகுரல் கேட்கத்தான் வேண்டுமா ? தாய்மார்கள் வேதனையால் தவிக்கத் தான் வேண்டுமா? பதில் சொல்லுங்கள். மதுவிலக்கினைச் செயல்படுத்துதில் சில குறை பாடுகள் இயலாமைகள் இருக்கலாம். ' தேவால யத்தினுள் நுழைந்து வருபவர்கள் எல்லாம் பத்து கட்டளைகளின் படி நடப்பவர்கள் அல்லர். அவர் களையும் அறியாமல் வழுவல்கள் இருக்கலாம். இருந் தாலும் ஒவ்வொரு முறையும் பத்துக்கட்டளைகளின் படி நடப்பேன்’ என்று உறுதிமொழி கூறத்தவறு வதில்லை.