பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காரரையும் இதைப் பற்றி அணுகிச் சொல்வதற்கு எனக்கு நெஞ்சுரம் இல்லை. ஏனெனில், அவர்கள் ஒன்று மிகப் பெரியவர்களாக இருக்கிறார்கள் அல்லது மிகச் சிறியவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் என்னைப்போல் சாதாரணமாக இருக்குஞ் செங்கல்வராயனை இத்துறையில் அணுகு கிறேன். எங்கள் நெடுநாளைய நட்பு அத் தகையது. எந்தெந்தச் சிக்கல்களிலோ தேசியம் பேசு கிறீர்கள், காங்கிரஸ் நண்பர்களே. மது ஒழிப்பை ஒரு தேசியச் சிக்கலாக முதலில் மேற்கொள்ளுங்கள். உங்கள் கட்சியைத் தாக்குவதாகத் தயவுசெய்து எண்ணவேண்டாம். என் இதயத்திலிருந்து வருஞ் சொல் அது. வீணான வெறும் பேச்சு என்று நினைக்க வேண்டாம். உள்ளத்து ஆசை அது. வகைப்பாடு : சமூகவியல் - மதுவிலக்கு (21-9-67 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் அனைத்துலக மனக்கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் தலைமை தாங்கித் துவக்கவுரை முடி வுரை ஆகிய இரண்டையும் ஆங்கிலத்தில் நிகழ்த்தியது. இங்கு அளிக்கப் பெற்றிருப்பது மொழி பெயர்ப்பு.) 18. மொழித் திணிப்பைக் கைவிடுக ஆங்கிலோ-இந்தியர்கள் மிகச் சிறுபான்மை யினராக இருந்தபோதிலும், அன்றாட நாட்டு நடப்புகளை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.