பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 இந்தித் திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெரு மளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது. ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மொழி என்றல்லாமல், உலக மொழியாயிருப்பதாலேயே, அதை நான் ஆதரிக்கிறேன். ஆங்கிலத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்த வர்கள் கூட, இப்போது அதனைப் புறக்கணித்து விடமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிருர்கள். நாட்டின் ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட மொழி யையோ, "எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந் தாகவேண்டும்”. என்னும் நிலையையோ பொறுத்த தல்ல. மாருக, உணர்ச்சியைப் பொறுத்ததாகும். ஆங்கில மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்த மானதாக இன்றில்லை. இரண்டாவது உலகப் போரின் போது மாவீரர் சர்ச்சில், ஆங்கிலம் பேசு கிற மக்களே ஒன்றுபடுங்கள் !’ என்று அறை கூவல் விடுத்தார். அமெரிக்கா நாடு அப்போதுதான் போரில் இறங்கியது. அப்படி ஒன்றுபடுத்தும் ஆற்றல் ஆங் கிலத்துக்கு உண்டு. உலகின் பல நாடுகளிலும் இன்று ஆங்கிலம் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வேறு பல நாடுகளில் இரண்டாவது மொழியாக அது கற்றுத்தரப்படுகிறது. சோவியத்து இரஷ்யாவில் கூட, ஆங்கிலம் சிறப்பு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.