பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கிருேம். இந்த நிலையை மாற்றிட நாம் அனைவரும் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும. காலமும் அதற்கேற்றபடி கனிந்து வருகிறது. ஜனநாய கத்தைப் பொறுத்தவரை இந்த நாடடில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஏதோ ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற் பட்டுவிட்டதாக ஒரு சில நிகழ்ச்சிகளே வைத்துக் கொண்டு கூறுகிறார்கள். ஆல்ை, உண்மையில் அப்படிப்பட்ட பேராபத்து ஏதுமில்லை. இவ்வளவு பெரிய நாட்டில் மூன்று பொதுத் தேர்தல்களை மிக்க அமைதியுடனும், வெற்றியுடனும் நடத்தி இரு க் கிருேம். இத்தனைக்கும் நமது நாட்டு மக்கள் பல் கலைக் கழகம் சென்று படித்தவர்கள் அல்ல! பிற நாடுகளில் தேர்தலின் போது ஏற்படும் இரத்தக் களரிகள் இல்லாமல், மூன்று தேர்தல்களே முடித்து இருக்கிருேம்! அமைதி குலையாமல், சட்டம் சீர்கேடு அடை யாமல், ஆட்சி மாற்றத்தையே செய்யும் அளவிற்கு மக்களின் மனத்தில் ஜனநாயகப்பண்பு படிந்து விட்டது. ஜனநாயகத்திற்கு மக்களால் எந்த வித மான ஆபத்துமில்லை. வாசன் அவர்கள் குறிப் பிட்டது போலத் தலைவர்கள் அதைக் கட்டிக்காக்க வேண்டும். ஆகவே, இருக்கிற குறையே அங்கே (தலைவர்களிடம்) தான் இருக்கிறது. மக்களிடம் எந்தவிதமான குறையும் இல்லை,