பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இராமசாமிக்கு ஆறுதலும், மாறனுக்குப் பாராட்டும் தெரிவித்த வாசன் அவர்களின் திறமை பாராட்டத் தக்கது. மாறன் வெற்றிபெறுவார் எனத்தெரிந்தும் கூட இராமசாமிக்குத்தான் ஒட்டுப்போட்டேன் என்று அவர் துணிவாகக் கூறியதைக் கண்டு மகிழ் கிறேன். மாறனுக்குத்தான் ஒட்டுப்போட்டேன் என்று இப்போது கூறுகின்ற சிலரது கூற்றை ஆரா யாமல், அப்படியே ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாங்கள் அரசியல் அனுபவம் பெருமலில்லை! அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கவனிக்காமல், மாறன் முன்னேற வேண்டும் என்று உளப்பூர்வ மாக வாழ்த்தியவர்களுக்கு என் நன்றி.

இங்கே சில நண்பர்கள் கலை உலகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா?’ என்னும் வாதம் பற்றிக் கூறிஞர்கள். ' அரசியல் என்பதே ஒரு கலைதான் என்பது” அறிஞர்கள் கண்ட முடிவு. "அரசியல் ஒரு கலையா? அல்லது வெறும் கருத்துக் குவியலா?” என்று ஆராய்ந்த பேரறி ஞர்கள், அரசியல் என்பது கருத்துக் குவியல் களின் வழி மக்களைத் திருப்பி, அவர்களைத் திருத்தும் ஒரு கலை," என்றே முடிவு கட்டியிருக் கிருர்கள்.

கலை என்பது மக்களைக் கட்டியாள்வது; அரசியல் என்பது மக்களைக் கட்டியாண்டு திருத் துவது. கலை என்பது நிழல் உருவில் இருப்பது: