பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

 மனித சமுதாயத்திற்குச் சிறந்த தொண்டாற்றியவர். மாமனிதர் மகாவீரர். மக்கள் தலைவர் காமராசர் தமிழ் மக்களுக்குச் சீரிய தொண்டாற்றியுள்ளார். பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் சிறந்த தமிழறிஞர். மாநில அரசு உறவுகள் நாட்டின் வளர்ச்சியை மையமாகக்கொண்டு அமைய வேண்டும். இந்தியாவில் அனைத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லாத நிலையே உண்மையான ஒருமைப்பாடு. ஜனநாயகம் இந்தியாவில் நிலைத்துவிட்ட ஒன்று. அதற்கு மக்களை விடத் தலைவர்களாலேயே அதிக ஆபத்து. அண்ணா தம்மைப்பற்றி ஆறு இடங்களில் தன் வரலாறாகக் கூறு கின்றார். அவற்றில் ஒன்று நகைச்சுவையானது (பக்கம் 45) மற்றொன்று உள்ளத்தை நெகிழச்செய்வது. ( பக்கம் 65) மது விலக்கிலும், ஆறுகளைப் பயன்படுத்துவதிலும் தேசியக் கொள்கை உருவாகவேண்டும், உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு அளிக்கவேண்டும், தமிழ் உலகலாவிய தன்மை உடையது. ஒரு நாட்டின் பெருமை, அடிப்படை என்றும் அது அளிக்கும் கல்வியிலேயே உள்ளன. பெண் கல்வி மிகமிக வேண்டப்படுவது. தமிழ்நாடு காவல்படை திறமை மிகுந்தது, சவாலைச் சமாளிப்பது. இவ்வாறு முத்தான கருத்துகள் தலைமை உரைகளில் மிளிர்கின்றன,

2. பண்புகள்

எல்லா உயுரிய பண்புகளையும் அண்ணாவின் தலைமை உரைகள் கொண்டுள்ளன. கூட்டப்பேச்சுகளின் பிழிவையும், அவைபற்றிய தம் கருத்துக்களையும் அண்ணா தருகின்றார். இனிய முன்னுரை, தங்குதடையிலா வளர்ச்சி, அரிய முடிவுரை ஆகியவற்றை அவை கொண்டுள்ளன. மேதகு மேற்கோள் மொழிகள், உலகளாவிய செய்தி, நாட்டுச்சிக்கல்களுக்குரிய நல்ல தீர்வுகள் முதலியவை அவற்றில் பளிச்சிடுகின்றன. அறிவார்ந்த அணுகுமுறை, முதிர்ந்த பகுப்பாய்வு ஆகியவை அவற்றில் இழையோடுகின்றன. ஆற்றொழுக்கு, ஆன்ற சொல் விரைவு ஆகியவையும் குறிப்பிடத் தக்கவை.