பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆனந்த விகடனில் கல்கி எழுதியதாக நினைவு. ஒருமுறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தம் பையிலிருந்த பொரிவிளாங்காய் உருண்டை ஒன்றை எடுத்துச் சாப்பிட்டாராம், உடனே எதிரில் இருந்தவர் கல்கியைப் பார்த்து நீங்கள் காங்கிரஸ்காரரா ” என்று கேட்டாராம், ஆம்” என்ருர் கல்கி. அதற்கு அவர் பொரிவிளாங்காயை காங்கிரஸ் காரன் சாப்பிடலாமா?’ என்று கேட்டார். 'ஏன், சாப்பிடக்கூடாதா?’ என்று கல்கி வினவினர். அ த ற்கு அவர், "பொரிவிளங்காயை நீங்கள் விரும்பிச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள இனிப் பில் நாட்டம் இருக்கிறது என்பது தெரிகிறது. இனிப்பில் நாட்டம் செலுத்தினுல் தேசபக்தி வருமா ?” என்று கேட்டார். இதிலிருந்து தெரிவது அரசியலில் அடிப்படைக் கருத்து விவாதங்களுக்குப் பதில் ம னி த னை ப் பற்றிய விவாதங்கள் வளருவதைத்தான் கல்கி அவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிட்ட இ ந் த நிகழ்ச்சி நடந்தது 30 வருட ங் களு க்கு முன்! இப்போதுகூட அடிப்படை அரசியல் கருத்துக்களே விவாதிப்பதை விட்டுவிட்டுத் தனிப்பட்டவர்களே விமர்சிப்பது எதைக் காட்டுகிறது? கல்கி, இரயிலில் க ண் ட மனிதர்கள் 30 வருடங்களுக்குப் பிறகும் வயதான நிலையில் உலவிக் கொண்டிருப்பதாகத் தான் தெரிகிறது. கலை என்பது மக்களின் மனத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாகும். எந்த நாட்டிலுமில்லாத முறை யில் தமிழகத்தில் நெகிழ்ச்சியை உருவாக்க எடுத்துக்