பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கொள்ளும் முயற்சி குறைவானது. அதிக முயற்சி இல்லாமல், தமிழக மாந்தர் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திட முடியும். அதற்குக்காரணம் நெகிழ்ச்சி என்னுஞ் சொல்லில் சிறப்பு ழ கரம் இருக்கிறது. தமிழிழிலிருந்து இருந்து பல நாட்டவர்கள் எதை, எதையோ எடுத்துக் கொண்டனர். பரதநாட்டியத் தைக் கற்றுக் கொண்டனர். ஆனால், அந்த ‘ழ’ வை மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அத்தகைய சிறப்பு 'ழ'கரம் இருக்கிற காரணத்தால், தமிழகத்துக் கலே மிக வி ைர வி ல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. மனம் நெகிழச் செய்வது கலை. நெகிழ்ந்த மனம் நெகிழ்ந்து கொண்டே போனுலும் பயனில்லை, நெகி ழாமல் இருந்தாலும் தவறு. ஆகவே, மனம் நெகிழ வேண்டும் கலையால்! அப்படி நெகிழ்ந்ததை வழிப் படுத்துவது பயன்பெறச் செய் வ து அரசியல் ! உள்ளத்தை நெகிழச் செய்யும் திறன் படைத்த கலைஞர்களிடமே, நெகிழ்ந்த உள்ளத்தை வழிப் படுத்தும் அரசியலும் இருந்தால் தவறு இல்லை! தவறு இல்லை என்பது மட்டுமல்ல; பொருத்தமிருக் கிறது; பொருளுமிருக்கிறது! இந்தக் கருத்துக்களை உலகம் உணர்ந்து நடக்கும் காலம் கனிந்து வரு வருகிறது. வகைப்பாடு : ஜனநாயகம்-மக்களும் கலையும். (20-11-67 அன்று சென்னையில் திரை உலகப் பெருமக்கள் அளித்த பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)