உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காத்த: நீங்களாக ஒரு முடிவு செய்து கொள்கிறீர்கள்......

தி. மு. க: இல்லையே! என் நண்பர், பழகிப் பார்த்துத்தான், காமராஜர் 'நம்மவர்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்; என்னைக்கூடத் திருத்தப் பிரயாசை எடுத்துக்கொண்டிருக்கிறார்.....

தி. க: நிச்சயமாக, விரைவில் திருந்திவிடுவாய்......காமராஜரூக்கும் திராவிடர் கழகத்துக்கும் உள்ள 'நேசம்' நியாயமானது என்பதை இப்போதே ஓரளவுக்கு உணர்ந்து கொண்டுதான் இருப்பாய்..... . தி. மு. க: அறிக்கையாலே, என்கிறாயா?

காத்த: என்ன அறிக்கை......?

தி. க: இந்தப் பயல்களுக்கு விளக்கம் தருவதற்காகப் பெரியார்.....வெளியிட்டிருக்கிறார்......படிக்கவில்லையா......

காத்த: என்ன எழுதியிருக்கிறார்?

[காத்தமுத்துவிடம் அறிக்கை தரப்படுகிறது.
படிக்கும்போது முகம் சில இடங்களில் சுளிக்கிறது. காத்தமுத்து முகம் சுளிக்கும்போது தி. மு. க; தி. க. வைக் கவனிக்கிறார்.
தி. க.சிறிது கோபமடைகிறார்; சமாளித்துக் கொள்கிறார்.

காத்தமுத்து, பத்திரிகையை தி. க. விடம் கொடுக்கிறார்.]

தி. க: எப்படி, விளக்கம்......

காத்த: உங்களுக்குத் தந்திருக்கிறார்.

தி. க: இதைப் பார்த்த பிறகுதான் இந்த கண்ணீர்த் துளிக்கு இலேசாக மனம் மாறி வருகிறது...

காத்த: எனக்கே, கொஞ்சம் மனம் மாறி வருகிறது.....

தி. க: பலே! பலே! வெற்றி,வெற்றி.....

தி. மு. க. காத்தமுத்து இனி கழகம்தான்......ஏன், அப்படித்தானே.

காத்த: ஏனப்பா, வீணாக, துரும்பைத் தூணாக்கிப் பேசுகிறீர்கள்? இந்த அறிக்கை, எனக்குக் குழப்பத்தைத்தான் தருகிறது......காமராஜர் யார், எப்படிப்பட்டவர் என்பதே இப்போது புரிய மாட்டேனென்கிறது......

148