பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. துய போராட்டம் கிளர்ச்சியையும் நேரடி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் உங்களது உணர்ச்சிகளிலும் போராட்டத்திலும் குறிக்கோளிலும் பொது உணர்விலும் உங்களிடம் ஈடுபாடு உள்ளவர்களிடமிருந்துதான் வருகிறது. உங்களைக் கடுமையாக இகழ்ந்தும் விடாப்பிடியாகத் தாக்கியும் தொந்தரவு செய்யும் பக்கமிருந்து வரவில்லை என்னும் உண்மையை மாணவர்களாகிய நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தத் துாய போராட்டத்தில் பிடிவாதமாகப் பங்குகொண்டு பணியாறறும் இராஜாஜி ஏற்கனவே தம்முடைய வேண்டு கோளை விடுத்துள்ளார். மாணவர்கள் பால் பரிவுகாட்டும் பத்திரிகையாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தித்திணிப்பைப் பொறுக்காது மாணவர்களைப் போன்றே உறுதியுடன் போராடுவதற்கு முன்வந்துள்ள இத்தகையோரின் வேண்டுகோள்களை நம்பிக்கையுடன் மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். -10-2-1965இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் மாணவர்களுக்கு அன்னா விடுத்த வேண்டுகோளின் ஒரு பகுதி சீரரிை உறுதிமொழி பைந்தமிழ்நாடு பல்வளம் பெறவும், சமூக நல்ஏற்றம் எய்தவும் எல்லாத்துறைகளிலும் மறுமலர்ச்சி காணவும் நல்ல ஆக்கப் பணிகள் ஆற்ற நம் தமிழகத்தில் நிறுவப் பெற்றுள்ள சீரணியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், அதன் நோக்கத்தில் நம்பிக்கையும் கொள்கையில் பற்றும் செயலில் ஈடுபாடும் கொண்டு உள்ளத்து ய் மையோடு காய்தல் உவத்தலின்றிக் கைம்மாறு கருதாமல் கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும் கடமையாற்றுவேன் என்று மனநிறைவோடு உறுதி கூறுகின்றேன்.