உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளித்தலையும் கம்யூனிஸ்ட்டு, 116 விழா காங்கிரசு, செய்தார்கள். சோசியலிசுட்டு, நீதிக்கட்சி, திராவிடக் கழகம் ஆகிய பல்வேறு கட்சிகளின் ஆதரவில், பல்வேறு கட்சிக் கொடிகளுடன், சென்னை பச்சையப்பன் பள்ளி விளையாட்டுத் திடலில், ஒளி விளக்குகளால் அழகுபடுத்தப் பட்ட கவர்ச்சிகரமான மேடையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. நாவலர் பாரதியார் அவர்கள் புரட்சிக் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் கவிஞருக்குப் பொற்கிழி அளித்தார்கள். தமிழகத்தின் தலைசிறந்த எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த சொற்பொழிவாளர்கள் அத்துணைப் பேரும் கலந்து கொண்டு புரட்சிக் கவிஞரைப் பாராட்டினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக்கிய குறிப்பிடத்தக்க பணிகளில், புரட்சிக் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திய விழாவும் ஒன்றாகும். மன்றம், தாள் 15-3-56 அந்தச் சிரிப்பொலி! இரவு மணி இரண்டு! அணைத்தும் அணைக் காத்துமான நிலையில் ஆரணங்கு தான் பெற்ற செல்வத்தைப் பக்கம் படுக்க வைத்து துயிலு கிறாள். அந்தப் பசும்பொன் முகத்தினிலே, பாலும் நிலவும பாங்காகக் குழைத்துப் பொலிவு அளிக்கிறது. தூங்கும் நிலை! எனினும் கல்கல் வனச் சிரிக்கிறது கேட்டதுண்டா? கண்ட துண்டா, அந்தக் காட்சி, அந்தச் சிரிப்பொலி யைக் காட்டிலும் சுலைமிகு ஒலியினை யாழும் சூழலுமா எழுப்பிடும? அறிஞர் அண்ணா