உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனச்சான்றுக்கு மாறாகப் போகாமை 1941-ஆம் ஆண்டில், இராசா சர். அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப் பட்டது. இரண்டு இடங்களிலும இயல், இசை, நாடகம், நடனம் போன்ற பல்வேறு அரங்கங்களும், தான தருமங் களும் நடைபெற்றன. தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப் பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக அறுபது பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டுச் சாமான்கள், அறுபது அரமி ஆட்டுக்கல்கள், அறுபது பசுமாடுகள் போனற இன்னபிறவற்றை இராசா சர் தானமாக வழங்கினார். . அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை யில், "விடுதலை" இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். 'பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத் தைக் கண்டிக்க வேண்டும் என்பதோடு, பார்ப்பனரல்லா தார் இயக்கத்தைச் சார்ந்த இராசாசர் சமூகத் துரையில் பார்ப்பனாக்கு அடிமை போகும் தன்மையையும் எண்மை யாகக் கண்டிக்க வேண்டும் அறிஞர் என்ற எண்ணம்