142 இப்பொழுதுதான் டிக்கட்டு கொடுத்தார்கள்!" என்று அண்ணா அவர்கள் அமைதியாகக் கூறினார்கள். என்ன "இந்த டிக்கட்டு வாங்க முடியவில்லை உங்களால், இப்பொழுது இரயில் போய்விட்டதே, இனி செய்வது?" என்று பெரியார் அவர்கள் சினந்து கொண் டார்கள். 'நான்தான் அப்பொழுதே சொன்னேனே, திருச்சிக்கே டிக்கட்டு எடுங்கள் என்று! நீங்கள் தானே கேட்கவில்லை!" என்று அண்ணா அவர்கள் கூறினார்கள். பிறகு வேறு வழியின்றிக் சரூரிலேயே தங்கியிருந்துவிட்டு அடுத்த புகைவண்டியில் திருச்சிககுச் சென்றார்கள். அது முதல் டிக்கட்டு வாங்கும் வேலைக்குப் பெரியார் அவர்கள் அண்ணாவை அனுப்புவதே யில்வையாம். மன்றம்,நாள் 1-8-56 தமிழா, தமிழனா? 'தமிழ் வளர்ச்சிக்கழகம்' என்றும் 'தமிழ்வெளி யீட்டுக் கழகம்' என்றும் நாம் வைத்துக் கொண் டிருப்பது எல்லாம் 'தமிழ் வளர வேண்டும் என்ப தால் அல்ல! தமிழ் வளர்ந்துதான் உள்ளது. 'தமிழன் வளர வேண்டும்' என்பதைத் தமிழ் வளர்ச்சி அடைய வேண்டும்' என்கிறோம். அதாவது தமிழ் வளர்ந்த அளவுக்குத் தமிழன் வளரவேண்டும் என்கிறோம். ரான் அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/143
தோற்றம்