உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் லூரியில் அண்ணா அறிஞர் அஷ்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது பாடங்களையோ, நோட்சுகளையோ அப்படியே உருப்போட்டு, பரிட்சையில் பதில் எழுதும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. அவர் பாடங்களையும், அத்துடன் விரிவாகப் மேற்கோள் காட்டும் மற்ற நூல்களையும் படித்து, அவற்றின் கருத்துக்களை நன்கு மனதில் கொண்டு விடுவார். பின் அவற்றை வைத்துப்பரிட்சையில் தமதுநடை யிலேயே எழுதிவிடுவது வழக்கம். அண்ணா அவர்கள் கல்லூரி இரண்டாவது வகுப்பில் படிக்கும் பொழுது, ஆங்கில வகுப்பை எடுத்த போராசிரியர் ஒருவர்,பாடஞ் சொல்லிக் கொடுப்பதில் சிறந்தவர் என்று கருதப்பட்டவர். அவர் வகுப்பில் கொடுக்கும் கேள்வி- பதில்களையும், குறிப்புகளையும், மாணவர்கள் உருப் போட்டு வைத்துவிட்டால் போதும், பரிட்சையில் 'பாஸ்' செய்துவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தது. அண்ணா மட்டும்,வகுப்பில் நோட்சுகள் எடுத்துக் கொள்வதில்லை. மற்ற மாணவர்களெல்லாம் தான் சொல்வதை ஒன்று விடாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் பொழுது, அண்ணா மாத்திரம் பேசாமல் உட்கார்ந்திருப்பதை பேராசிரியர் பார்த்து விட்டார். "அண்ணாதுரை ! நீஏன்சும்மா a ட்கார்ந்திருக்கிறாய்" என்று ஆசிரியர் கேட்டார். .