பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


வாடிய பயிருக்கு வந்த மழைத்துளி

சர். தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்கட்குத் தலைமை பூண்டு அவர்களின் தன்னுணர்விற்கு வழிகோலி அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டுச் சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்இடம்பெற்று உழைத்தார் நம்முடைய அடிப்படைக் கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமென்று அவர் அல்லும் பகலும் பாடுபட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு மூலகாரணமானவர் யார் ? நம் தியாகராயர். திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் அவர்.

“நாமிருக்கும் நாடு நமதென்று அறிய வேண்டும். இங்கு நாம் அடிமைகளாக வாழ்வது அடாது” என்பதை அவர் உணர்ந்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. வாடிய பயிருக்கு வந்த மழைத்துளிபோல, அலுத்த உடல் மீது இனிய தென்றல் போல, கொல்லும் காசத்தைக் கருவறுக்கும் மருந்து போல, அன்று தேய்ந்து வந்த திராவிடருக்கு ஆறுதல் அளித்து அவர்களின் புத்துயிர்களுக்குக் காரணமாகக் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதின் பலனை இன்று காண்கிறோம்.

சமுதாயப் புரட்சிக் கொடி!

இன்று நம் கழகத்துக்கு இலட்சக்கணக்கான அங்கத்தினர்கள், ஆயிரத்துக்குமேல் தொண்டர்கள், நூற்றுக்கணக்கான கழகங்கள், பத்துக்குமேல் பத்திரிகைகள், கணக்கற்ற புத்தகங்கள், இருக்கின்றன. ஆகவே