பக்கம்:அண்ணா காவியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

'சமுதாய உணர்வே' என்னும் அணியின் தலைவர் டாக்டர் அவ்வை நடராசன் அவர்கள். பேராசிரியர் கு. சிவஞானம், புலவர் இளஞ்செழியன் இருவரும் அவரைச் சார்ந்து வாதங்களை எடுத்து வைத்தார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி முதன் முதல் எழுதப் பெற்ற ஒரு தமிழ்க் காவியத்துக்கு-அமைச்சர் முன்னிலையில் சட்டமேலவைத் துணைத் தலைவர் தலைமையில் அந்தக் காவியத்தின் படைப்பாளரே கண்ணாரக் கண்டுகளிக்கும் வகையில் ஒரு பட்டிமன்ற விழா தமிழகத்தில் நடைபெற்றது. இதுவே முதல் தடவை!

அடுத்தநாள் மாலை அண்ணா காவியம் நூலுக்குப் பேராவூரணியில் பொதுமன்றில் பாராட்டு விழா நடந்தது.

கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் முன்னின்று நடத்திய அந்த இலக்கிய விழாவுக்குத் தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

மாண்புமிகு அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்கள் முன்னிலை ஏற்றார்கள். திராவிட இயக்கச் செம்மல்களான பேராவூரணி கு. அடைக்கலம், அறந் தாங்கி ஆ. துரையரசன், பேராவூரணி வி. எஸ். குழந்தை, அவ்வை நடராசன், முத்துப்பேட்டை ந. தருமலிங்கம், கொல்லுமாங்குடி வரதகோபால கிருட்டிணன், சுப்பிரமணியபுரம் இரா. இராசன், பூ. கொல்லை கிருட்டின மூர்த்தி, நாடியம் இராமையன் முதலானோர் 'அண்ணா காவியம்' நூலைப் பாராட்டித் தங்கள் சொல் மாலைகளைச் சூட்டினார்கள்.

1976 பிப்ரவரி 3-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு நாள். அண்ணா சதுக்கத்துக்கு எதிரேயுள்ள சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழ்த் துறையின் சார்பாக அண்ணா காவியம் நூலுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தப் பெற்றது. டாக்டர் கிருஷ்ணா சீனிவாஸ் தலைமை ஏற்றிருந்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் காவியத்தைத் திறனாய்வு செய்து உரையாற்றினார்.

ஒருமணி நேரத்திற்கு மேல் மிக அழகான உத்திகளுடன் தமிழில்-இல்லை-ஆங்கிலத்திலேயே அவர் அப்படிக் கருத்து விருந்து படைத்தார், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/10&oldid=1077996" இலிருந்து மீள்விக்கப்பட்டது