பக்கம்:அண்ணா காவியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அண்ணா காவியம்


சொத்தெல்லாம் கைப்பற்றிக் கொள்வோம் என்று
சூடாக நம்புரட்சிக் கவிஞர் சொல்ல,

மெத்தசரி என்றுசிலர் ஆமோ திக்க,
விளையாட்டுக் காகவேனும் கூறா தீர்கள்!

சத்தான பெரியாரே நமைவெ றுத்துச்
சக்கையென ஒதுக்கியபின், அழியுஞ் செல்வம்

எத்தனைதான் வந்தாலும் நமக்கேன்? வேண்டாம்!
எனஎழுந்து சென்னைக்கே வந்தார் அண்ணா!



ஏற்காடு மலைமீதில் இருந்த தந்தை
இயக்கத்து முதியவர்கள் வேண்டு கோளை

ஏற்காமல் திருப்பிவிட்டார்; முப்ப தாண்டாய்
எதிர்ப்புகளைத் துச்சமென ஒதுக்கித் தள்ளித்

தோற்காத தன்மானக் கொள்கை காக்கத்
தொல்லைகளை ஏராளம் அனுப வித்தோர்

நூற்காத பஞ்சுபோல நுடங்கி மீண்டார்...
நூதனமாய் வழிகாட்டும் அண்ணா வின்பால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/100&oldid=1079700" இலிருந்து மீள்விக்கப்பட்டது