பக்கம்:அண்ணா காவியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அண்ணா காவியம்


பெற்ற அந்த நன்கொடையைத் தந்த வர்பால்
பெருந்தகையால் நன்றியுடன் அனுப்பி வைத்தார்!

கற்றவர்க்கும் கற்பிக்கும் மேதை அண்ணா
கல்லார்க்கும் களிப்பருளும் பண்பு கொண்டார்

அற்றைநாள் தீட்டியதோர் அரிய நூலாம்
"ஆரியமாயை" மீதும் வழக்குப் போட்டுப்

பிற்றைநாள் வெளிவந்த தொகுப்பு நூலாம்
"பெரியாரின் பொன்மொழிகள்" மீதும் போட்டார்!



இருவருக்கும் ஆறுதிங்கள் சிறையும் தந்தார்;
இருவரையும் திருச்சிக்கே அனுப்பி வைத்தார்!

இருவருக்கும் தண்டனையா? உறவு கொள்ள
ஏற்பாடா? அடுத்தடுத்த அறையில் இட்டார்!

இருவருமே மரநிழலில் பகலில் எல்லாம்!
இடையிலொரு பேச்சுமில்லை; பகைமை தன்னைக்

கருவறுக்கத் தின்பண்டம் பரிமாற் றங்கள்!
கண்ணியமோ? பத்துநாளில் வெளியே விட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/108&oldid=1079755" இலிருந்து மீள்விக்கப்பட்டது