பக்கம்:அண்ணா காவியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறப்போர்க் காதை
111

நாவலர், சம்பத், நடராசன், மதி,

ஆவலால் அய்வராம் அண்ணா குழுவைச்

சென்னைச் சிறைக்குள் முன்னரே அடைத்தனர்!

இன்னும் வெளியில் யாரை விடுவரோ?

தலைமைக் கழகமோ தவழும் குழந்தை

நிலைமையில்; அதனை நிர்வகிப் பவர் யார்?

வன்னியர் குலத்திலே வந்தவர் நமக்கு

என்றுமே...

அன்னிய ராகா அருமை நண்பராம்

குணத்தின் குன்று கோவிந்த சாமியைக்

கனத்திலே நினைத்துக் காவலாய் வைத்தனர்!

கண்ண தாசனும் கல்லக் குடிகளம்

நண்ணியே சிறையில் நயந்து நுழைந்தார்.

முன்னரே வந்த சின்னவர் மனோகரன்

நாநயம் மிக்க நல்லபேச் சாளர்.

இதுவரை இருந்த இணையிலாச் சிவாசி

மெதுவாய் நகர்ந்தார்! புதிய வரவாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/113&oldid=1079772" இலிருந்து மீள்விக்கப்பட்டது