பக்கம்:அண்ணா காவியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



களம்புகு காதை
119


எஞ்சிநின்ற வீரரெல்லாம் மீனம் பாக்கம்
எழில்விமான நிலையமுதல் இரும ருங்கும்

அஞ்சிடாது கருமைநிறக் கொடியைக் காட்டி
அண்ணனிட்ட ஆணைநிறை வேற்றி னார்கள்!

வஞ்சியர்க்குத் தென்பளித்தார் வெற்றிச் செல்வி!
மரணஅடி பட்டுவீழ்ந்தார் அரசு! பின்னாள்

செஞ்சிமன்னர் போலிவர்தான் கழகம் தந்த,
சென்னைநகர் முதல்தந்தை; விந்தை பாரீர்!




"சீமான்கள் கொலுவிருக்கும் மன்ற மாகச்
சென்னைமா நகராட்சி இருந்த துண்டு!

சாமான்யர் நாடாளுங் காலத் தில், நாம்
சரித்திரத்தை மாற்றலாமே? கேட்டார் அண்ணா!

"ஆமாமாம்: அனுமதித்தால் முயல்வேன்!" என்றார்!
அண்ணனுக்குத் தளபதியாம் கலைஞர் அன்றே!

"ஏமாந்து போகாதே" எனப்பயந்தார்...
இல்லையன்றோ? வெற்றி தொடர் கதையாய்க் கண்டோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/121&oldid=1079895" இலிருந்து மீள்விக்கப்பட்டது