பக்கம்:அண்ணா காவியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அண்ணா காவியம்


"வெட்டிவா!" என்றுரைத்தால் கட்டி வந்து,
"வேறென்ன?" எனக்கேட்டே அண்ணன் ஆணை

அட்டியின்றி நிறைவேற்றுந் தம்பி யாக
அருங்கலைஞர் சென்னைமா நகரின் ஆட்சி

கெட்டியாய்க்கை பற்றியதால் அண்ணா கையால் :கீர்த்திமிகுங் கணையாழி அணியப் பெற்றார்!

ஒட்டிஉற வானச்ம்பத், உள்ளத் துள்ளே
ஒழியாத அழுக்காற்றை நிரப் லானார்!




பரந்தமன அண்ணனுக்குத் தொல்லை யாகப்
பல்வேறு செயல்களிலே ஈடு பட்டார்.

நிரந்தரமாய்த் தன்பின்னே வருவா ரென்று
நினைத்தசில தோழரையும் இழுத்துப் போனார்;

உரந்தந்த தலைவனையே ஒதுக்கிச் சென்றார்; :உயர்வென்று தனிக்கட்சி ஒன்று கண்டார்.

மறந்தாற்போல் மாநாட்டு வருமா னத்தை
மறைத்துவிட்டுத் தன்வசமே வைத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/122&oldid=1079900" இலிருந்து மீள்விக்கப்பட்டது