பக்கம்:அண்ணா காவியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



களம்புகு காதை
121

முன்னேற்றக் கழகத்தைக் கண்ட பின்னும்
முறைகேடாய்ப் பெரியாரைப் பேச வில்லை...

தந்நேரில் கண்ணியத்தைப் பொதுக்கூட் டத்தில்
தமிழகத்தார் கடைப்பிடிக்க விதைத்த அண்ணா!

பொன்னேபோல் போற்றிவந்த இப்பண் பாட்டைப்
புழுதியிலே வீசிவிட்டார் இளவல் சம்பத்!

என்னேதான் பகைகொளினும் அண்ணன் பேரை
இவர்வாயால் உச்சரித்தார்; எழாமல் வீழ்ந்தார்!




இரண்டொருவர் எதைநினைத்தோ பின்னால் சென்றார்;
ஏதோவோர் புதுக்கட்சி; பெயரே மோசம்!

திரண்டுவரு வார்தொண்டர் என்று பார்த்தால்...
சேர்ந்தவரும் மீண்டும்போய் அண்ணா வின்பால்

மிரண்டுமிக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்!
விரைவாக சம்பத்தும் கலைத்து விட்டுப்

புரண்டுசென்று காமராசர் குழுவில் சேர்ந்தார்;
புழுக்கத்தால் எதிர்காலம் கெடுத்துக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/123&oldid=1079906" இலிருந்து மீள்விக்கப்பட்டது