பக்கம்:அண்ணா காவியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



களம்புகு காதை
123

கோவையிலும் சிதம்பரனார் பூங்கா தன்னில்
குவிந்தனரே மக்களொரு வெள்ள மாக;

யாவையிலும் சிறப்புமிக்க அம்மா நாட்டில்
எதிர் வந்த தேர்தல்வேட் பாளர் சொன்னார்!

"தேவையுறும் எதிர்க்கட்சி திடமாய் வேண்டும்;
திட்டுதற்கே பிரிந்துசென்றோர் திருந்த வேண்டும்;

சேவையினால் நாம்சிறப்போம்!" என்றார் அண்ணா;
சீர்எண்ணி இராசாசி ஆத ரித்தார்!




அறுபத்தி ரண்டினிலே வந்த தேர்தல்
அளவற்ற மாறுதலைச் செய்த திங்கே!

உறுபதினய்ந் தில் மீண்டும் ஒருவர் கூட
உள்ளேசெல் லாவண்ணம் எதிர்ப்புத் தந்தார்.

செருமுனைவாழ் கலைஞரைத்தான் வெல்ல வில்லை; :சினத்துடனே மற்றவரைத் தோற்கடித்தும்

மருவிலாதார் அய்ம்பதுபேர் சட்டமன்றில்
மாண்புடனே எதிர்க்கட்சியாகிச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/125&oldid=1079915" இலிருந்து மீள்விக்கப்பட்டது