பக்கம்:அண்ணா காவியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிரிவினை விடுத்த படலம்


விந்தியத்தின் தென்புறத்தில் அண்ணா என்றால் :விரும்பாத மனிதரில்லை, ஆனால் இந்த

விந்தைமிகு தலைவரையோ வடபுறத்தில்
வெகுசிலரே அறிந்திருந்தார்! நமது தோழர்

சிந்தையணு எவற்றிலுமே நிறைந்தி ருந்த
திராவிடநா டென்கின்ற இலட்சி யத்தை

எந்தவிதம் உலகினுக்கே எடுத்து ரைப்போம்!
எழில்வாய்ப்பாய்க் காஞ்சியிலே அண்ணன்தோற்றார்!




நாடாளு மன்றத்திற் கெண்மர் சென்றார்;
நல்லவர் சேர் மாநிலங்கள் அவைக்குள் அண்ணா

ஆடாத தலைகளுமே அசையும் வண்ணம்
அடுக்கடுக் காய் ஆங்கிலத்தில் முரசொ லித்தார்.

"வாடாமல் சாலை ஓர நடைபா தைமேல்
வசிக்கின்ற ஏழையரின் தூதன் யானே!

"பாடாத குயில்களுக்கும் குரல்கொ டுக்கும்
பாட்டாளி வர்க்கத்தின் தோழன்!" என்றார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/126&oldid=1079922" இலிருந்து மீள்விக்கப்பட்டது