பக்கம்:அண்ணா காவியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிரிவினை விடுத்த படலம்
125


இருபதாண்டாய்த் திராவிடநா டென்னும் கொள்கை
இழையோடும் கழகத்தை நடத்தி வந்தும்,

ஒருபதரும் இஃதென்ன என்று கேட்க...
உண்மையான தேவையாவை எனவி னாவத்...

தருபயன்தான் உளவோஎன் றறிந்து கொள்ளச்...
சற்றேனும் முயன்றதுண்டா? உணர்ந்த துண்டா?

செருபகைவர் அண்ணாவின் விளக்கம் கேட்டும்,
தீய்ப்பதற்கு வஞ்சகமாய்த் திட்ட மிட்டார்.




"அய்ம்பதுபேர் சென்றுவிட்டோம்!" என்ப தாலே
ஆணவமாய் வீற்றிருக்க வில்லை, உள்ளே

வெம்பிநின்ற மக்களுக்கு விடிவு காண...
விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கக் கோரி...

நம்பிநிற்கும் தொண்டருக்கே ஆணை தந்தார்!
நாடெங்கும் அறப்போராம்; மறியல் ஒர்நாள்!

கம்பிகளுக் கப்புறத்தில் கலயம் ஏந்தும்
கைதிகளாய் இருபதாயி ரம்பேர் நின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/127&oldid=1079929" இலிருந்து மீள்விக்கப்பட்டது