பக்கம்:அண்ணா காவியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அண்ணா காவியம்


அண்ணாவே லூரில்; நா வலர்சென் னைக்குள்;
ஆயிரமாய்க் கலைஞருடன் திருச்சிக் குள்ளே!

கண்ணான பொற்செழியன்.மணியன் என்ற
காளையர்கள் இருவருமோ கல்ல றைக்குள்:

புண்ணான கழகத்தார் சிறைக்குள்! நையப்
புடைத்திட்ட கல்நெஞ்சர் கோட்டைக் குள்ளே!

மண்ணாளும் பேராசை படைத்த சீனன்
வஞ்சகமாய் இந்தியாவின் எல்லைக் குள்ளே!




பிரிவினையைப் பேசுவதே பெரிய குற்றம்;
பிடித்தடைப்போம் சிறைக்குள்ளே நீண்ட காலம்!

பிரிவினையைப் பேசுகின்ற கட்சி தன்னைப்
பெரியதொரு சட்டத்தால் தடையும் செய்வோம்!

பிரிவினையைப் பேசிடுவோர் தேர்தலுக்குள்
பிரவேசம் செய்வதையும் தடுப்போம்" என்று...

சரிவினையே நாடிநின்ற தேசி யத்தார்
சட்டமொன்றும் நிறைவேற்றி மிரட்ட லானார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/128&oldid=1079932" இலிருந்து மீள்விக்கப்பட்டது