பக்கம்:அண்ணா காவியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிரிவினை விடுத்த படலம்
127

சிந்தனைத்தீ அணையாமல் எரியு மாறு
சிறைக்கோட்டம் எண்ணெயிட்டுக் காக்கு மன்றோ?

பந்தமுடன் தாயுணர்வால் கழகங் கண்ட
பண்புருவாம் அண்ணாவும், மாறி மாறி

எந்தவழி தேர்ந்தெடுப்பதென நினைந்தார்:
"எதுவரினும் சரியென்ற பிடிவாதத்தால்...

முந்திவந்து போராடி மோதிப் பார்த்தால்...
முடிவென்ன? கழகந்தான் ஒழிந்து போகும்!




பாராளு மன்றசன நாயகத்தைப் -
பயின்றுநமக் குற்றதென ஏற்றுக் கொண்டோம்!

பாராட்டும் வண்ணமிந்த அய்ந்தா றாண்டில்
பணிபுரிந்தே அனைவர்க்கும் காட்டி யுள்ளோம்!

நேராகப் பிரிவினைக்கொள் கை, கை விட்டு
நேரத்திற் கியையுமாறு வெளிநாட் டார்கள்

போராட இடங்கொடுக்க மாட்டோம் என்றால்...
போற்றியேநாம் வளர்த்துவந்த கழகம் வாழும்!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/129&oldid=1079936" இலிருந்து மீள்விக்கப்பட்டது