பக்கம்:அண்ணா காவியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரிவினை விடுத்த படலம்
i29

மூப்படைந்த தலைவரெல்லாம் பதவி நீங்கி
முற்றாத இளைஞருக்கு வாய்ப்பு நல்க

நாப்பறையாய்க் காமராசர் திட்டம் தந்து
நல்லிளைஞர் (?) பக்தவத்ச லத்துக் காக

மாப்புகழ் சேர் கட்சிக்கே தலைவ ராகி,
மாணிக்கம் நேரு பிரான் மறைந்த பின்னர்,

வாய்ப்புடனே லால் பகதூர் தலைய மைச்சாய்
வழிவகுத்தார் பசுந்தமிழர் காம ராசர்!




எல்லையிலே கால்வைத்தான் இழிந்த சீனன்!
எதிரிகளை முறியடித்தல், எங்கள் நோக்கம்!

தொல்லைமிகப் பட்டாலும், துணிவு கொண்டு
தூயகொள்கை பிரிவினையை விட்டு விட்டோம்!

நல்லவண்ணம் ஆதரவைத் திரட்டித் தந்து,
நாட்டினது மானத்தைக் காப்போம்!' என்று

சொல்லி விட்டார் பேரறிஞர் வேலூ ரின்கண்!
சொரணையுள்ளோர் சூட்சுமத்தைப் -

புரிந்து கொண்டார்.

அ-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/131&oldid=1079953" இலிருந்து மீள்விக்கப்பட்டது