பக்கம்:அண்ணா காவியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அண்ணா காவியம்


பட்டியல்கள் இதோ! என்றார்; நாடு முற்றும்
பாய்புலிபோல் வீரரது பெயரைக் காட்டி.

முட்டவரும் மொழிப்பகையை ஒழிப்ப தற்கு
முனைந்திருக்கும் போர்க் குணத்தை விளக்கிச்
சொன்ன

"அட்டியின்றிப் புறப்படுவோம்! முதலில் நானே
அணிநகராம் சென்னையிலே கடலோரத்தில்

பட்டப்ப கல்நேரம் தீயை வைப்பேன்!
பலநகரில் பணிதொடரும்!" என்றார் அண்ணா!




அடுத்துவந்த ஆண்டுக்குள் மாவட்டங்கள்
அணிஅணியாய் ஆளனுப்பித், தீயை வைத்து,

விடுத்திட்ட அம்புகள்போல் தொடர்ந்து சென்று,
வெஞ்சிறையின் அறைகளெல்லாம் நிறைத்துவிட்டா

எடுத்தெறிந்து பேசுவோராம் மதுரை முத்தும்...
இளையவராம் தென்னரசும் நீண்ட வாசம்

தொடுத் தனரே! கலைஞர்,நட ராசன், மன்னை
துண்டிவிட்ட தாகப்பொய் வழக்கும் போட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/134&oldid=1079966" இலிருந்து மீள்விக்கப்பட்டது