பக்கம்:அண்ணா காவியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

அண்ணா காவியம்


"இத்திருநாள் எமக்கில்லை; துக்க நாளே!
எனினுமதன் முதல்நாளே நமது வீட்டில்

இத்தருணம் நம்எதிர்ப்பைக் காட்டு தற்கே
இருள்கருப்புக் கொடியொன்றை வைப்போம்!"
என்றால்...

மெத்தனமாய், ஆணவமாய், முதல மைச்சர்
"வேடிக்கை பார்ப்பாரோ மக்கள்?" என்றார்.

சத்தியத்தின் வாரிசுகள் பலாத்கா ரத்தால்
தடியெடுத்துக் கொடியறுத்துக் கலகம் செய்தார்!




தன்னைத்தான் வருத்துகின்ற தியாகத் தைத்தான் :சாந்தகுண அண்ணாவும் கையாண் டாலும்

சென்னையிலும், திருச்சியிலும் தீக்கு ளித்தும்
தியாகமென நஞ்சுண்டும் எண்மர் செத்தார்.

முன்னுமில்லை பின்னுமில்லை உலகில் எங்கும்
மொழிகாக்க இப்பெரிய இழப்புக் கண்டோர்!

இன்னுமிதில் நமக்குடன்பா டில்லை! ஆனால்,
இவர்நோக்கம் தூயதன்றோ? மதித்தோம் நன்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/136&oldid=1079976" இலிருந்து மீள்விக்கப்பட்டது