பக்கம்:அண்ணா காவியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அண்ணா காவியம்


பெருந்தன்மை யாற் சொன்ன பேரு ரைதான்
பிறர் யார்க்கும் வாராத தனிமைப் பண்பாம்!

பெருந்தலைவர் முதலாகத் தொண்டர் ஈறாய்ப்
பேசியதும் ஆடியதும் மறந்தா போகும்?

வருந்துவதாற் பயனென்ன? தலைவர் அண்ணா
வந்துற்ற பெரும்பொறுப்பை ஏற்க வேண்டும்!

பெருந்திரளாய் வாழ்த்தவந்த இதழாளர்க்குப்
பேட்டியிலே கழகத்தின் திட்டம் சொன்னார்.




"பெருமிதமாய்க் கடந்தகாலம் திரும்பிப் பார்ப்போம்.
பெரியாரின் கோபசாபம் வளர்க்கக் கண்டோம்;

கருமுகத்தால் குட்டிகளை முட்டி மோதும்
களிறுபோலத் தந்தைநமைப் பழக்கி விட்டார்!

ஒருமித்த கருத்துடனே சுதந்தி ராவும், -
உடைமைபொது வென்போரும், முசுலீம் தாமும்

செருமுகத்து முற்போக்குக் கட்சி யாரும்...
சேர்ந்துநமைப் பெரும்பான்மை யாக்கித் தந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/146&oldid=1080010" இலிருந்து மீள்விக்கப்பட்டது